காஞ்சிகுடிகாட்டில் தூர் வாரும் பணிகளை தொழில்துறை அமைச்சர்

79பார்த்தது
குருவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் வாய்க்கால்கள் வடிகால்கள் ஆறுகள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது இதனை ஒட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காஞ்சி குடிகாடு கிராமத்தில் செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தமிழக தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா இன்று கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். காஞ்சிகுடி காடு மேல நாகை கீழ நாகை, சுந்தரகோட்டை இடையர் நத்தம் வழியாக 11 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் வடவாறு பாய் கால் தூர் வாரும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் அரசுத்துறை அதிகாரிகள் திமுகவினர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி