திருவாரூரில் இந்திய தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
தொழிலாளர் வினோத சட்டங்களை கண்டித்து திருவாரூரில் இந்திய தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் அனைவருக்கும் மாத ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்கிட வேண்டும், ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தர படுத்த வேண்டும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச மாத ஊதியத்தை வழங்க வேண்டும், அங்கன்வாடி, நகராட்சி, மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள், டாஸ்மார்க் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி