ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

63பார்த்தது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குறுவைத் தொகுப்பு குளறுபடியை சரி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முன் நின்று 50 ககும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடி 90 ஆயிரம் ஏக்கர் என மாவட்ட வேளாண்மை துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு

தற்போது வரை 70 ஆயிரம் ஏக்கர் வரை மட்டும்தான் நேரடி நெல் விதைப்பு, நடவு இயந்திர நடவு ஆகிய மூன்று வகைகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இயந்திர நடவு நடுபவர்களுக்கு மட்டும்தான் ஏக்கருக்கு 4, 000 ரூபாய் கிடைக்கும் என குறுவை தொகுப்பு இல் அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என விவசாயிகள் வாதம் செய்தார்கள்

குறைவான அளவு இந்த ஆண்டு குறுவை சாகுபடி மாவட்டம் முழுவதும் செய்யப்படுவதால் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த 4000 நடவு மானியத்தை வழங்க வேண்டும் என ஆட்சியர் முன் நின்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி