திருவாரூரில் பல லட்சம் மதிப்பிலான கஞ்சா பொருட்கள் பிடிபட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து திருவாரூருக்கு பல லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்த 5 நபர்களை narcotics bureau காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். "
தெலுங்கானா மாநிலத்திலிருந்து இரண்டு கார்களில் 400 கிலோ மேல் எடை கொண்ட பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை கடத்தி வந்தவர்களை narcotics bureau காவல்துறையினர் தொடர்ந்து பாலோ செய்து வந்துள்ளார்கள்.
பிறகு அவர்களை திருவாரூரில் திருவாரூர் நாகை சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காருடன் தனியார் ஓட்டலுக்குள் நுழைந்த பொழுது அவரை கைது செய்ய narcotics bureau காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது அவர் தன்னுடைய காரை விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
தொடர்ந்து. தனியார் ஓட்டலில் வைத்து கஞ்சா கடத்தி வந்தவர்களை narcotics bureau காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.