திருவாரூரில் தீ விபத்தில் நான்கு வீடுகள் எரிந்து சேதம்.

0பார்த்தது
திருவாரூர் நகர் பகுதியில் உட்பட்ட திலகர் இரண்டாவது தெருவில் வசித்துவரும் ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் கட்டுப்படுத்த முயன்றனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் அருகே இருந்த குமரேசன், ராஜீவ் காந்தி, அன்பரசன் ஆகிய நான்கு வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் அருகே இருந்த பல கூரை வீடுகள் தப்பின. தீ விபத்து குறித்து திருவாரூர் நகரப் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்கு காரணம் மின்கசிவா அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கோழிகள் என கால்நடைகளும் உயிரிழந்தன. இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் , பொருட்கள் சேதமடைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி