திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாரு, ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சாரு ஶ்ரீ சாதி சமய வேறுபாடுகளுக்கு எதிராக பல ஆண்டுகள் போராடி பெற்ற அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம அனைவரும் போராடுவோம் என பேசினார். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செல்வகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.