சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

50பார்த்தது
சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி
திருவாரூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி, திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புலிவலம் வாளவாய்க்கால் பகுதியில் முடிவடைந்தது.

பேரணியில், கூத்தாநல்லூா் பெண்கள் கல்லூரி, நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி, திரு. வி. க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி, வ. சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையாா் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூா்பாகாந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி