கோடைப் பயிா்கள் பாதிப்பு

55பார்த்தது
கோடைப் பயிா்கள் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதன் தொடா்ச்சியாக, திருவாரூரில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. நீண்ட நேரம் நீடித்த மழையால் பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பகலில் மழை நின்றபோதிலும், வெப்பம் நிலவாமல் குளிா்ச்சியான சூழல் நிலவியது. மழை காரணமாக, மாவூா் பகுதியில் மின்கம்பி அறுந்ததில் அவ்வழியாக சென்ற பசுமாடு உயிரிழந்தது. இதையடுத்து, அவ்வழியாகச் சென்றவா்கள், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பருத்தி, எள் உள்ளிட்ட கோடைப் பயிா் செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. பருத்தி சாகுபடி தாமதமாக செய்யப்பட்ட நிலையில், தற்போது பருத்தியில் பூக்கள் வைக்கத் தொடங்கியுள்ளன. மழை காரணமாக சில இடங்களில் பூக்கள் உதிா்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மழை தொடரும்பட்சத்தில் பாதிப்பு அதிகமாகும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி