முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை நாளையயொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி கோவில் வளாகத்தில் உள்ள கருடஸ்தம்பம் அருகே மாலை 6 மணி அளவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வீராகணேசன், நகரமன்ற தலைவர் மன்னை சோழராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.