வரலாற்று சிறப்பு மிக்க சக்திபீடங்களில் முக்கியமானதும், ஞானபீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜசுவாமி்ஆலயத்தில் ஈசான திசை நோக்கி தவகோலத்தில் ஞானசக்தியாக விளங்கும் அருள்மிகு கமலாம்பாள் அம்மன் ஆடிப்பூரவிழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி அருள்மிகு வினாயகர், சுப்ரமணியர், மனோண்மணி அம்மன், சண்டிகேஸ்வரி ஆகிய சுவாமிகள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்று வீதியுலா வந்தது.
பின்னர் சுவாமிகள் ஆலயத்திற்கு வந்தபின்னர் கமலாம்பாள் சன்னதி எதிரே ்உள்ள கொடிமரம் அருகே கடங்கள் வைக்கப்பட்டு யாகபூஜைகள் நடைப்பெற்றன. தொடர்ந்து கொடிமரத்திற்கு திரவியம், மஞ்சள்பொடி, அரிசிமாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்கால் அபிஷேகங்கள் நடைப்பெற்றன.
பின்னர் கொடிமரத. திற்கு பூஜிக்கப்பட்ட கட அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து ரிஷபம் வரையப்பட்ட கொடிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டு மங்கள வாத்யங்கள் இசைக்க கொடிமரத்தில் ரிஷப கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர். பின்னர் சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கு தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்துக்கொண்டு கொடி்ஏற்றத்தை கண்டுகளித்து அம்மனை வழிப்பட்டனர்.
இந்த ஆடிப்பூரவிழாவின் முக்கியவிழாவான ஆடிப்பூரதேரோட்டம் வரும் 6 ஆம் தேதியும், 7 ஆம்தேதி ஆடிப்பூர விழாவும் நடைப்பெறுகிறது.