திருத்துறைப்பூண்டி திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தார்கள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் திருக்கோவில் இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாத தீமிதி திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது மாலை நேரத்தில் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.