திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து கீற்று ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலைகுப்பு கவிழ்ந்த லாரியின் பின்புற சக்கரங்கள் கழன்றன. தகவலறிந்து விரைந்து வந்த முத்துப்பேட்டை காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.