மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மன்னார்குடியில் அரசி யோகாலயா அகடமி சார்பில் மாநில அளவிலான யோகா போட்டிகள் இன்று (ஜனவரி 4) நடைபெற்றது. பல்வேறு வயதினருக்கும் 13 வகையான பிரிவுகளில் யோகா போட்டிகள் நடைபெற்றது. தஞ்சை நாகை திருவாரூர் சென்னை கோவை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் இளைஞர்கள் யோகா போட்டிகளில் பங்கேற்றனர்.
உர்தவமுத்த திதிப்பாசனா, முருகமுக்தாசனா, ஏகபாத விபரீதசலபாசனா, உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை சிறுவர் சிறுமியர் இளைஞர்கள் சிறப்பாக செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.