அடிப்படை வசதி செய்து தரக் கோரி சாலை மறியல் போராட்டம்

76பார்த்தது
அடிப்படை வசதி செய்து தர கோரி வேலூர் பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வரம்பியம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பகுதிநேர அங்காடி முழு நேர அங்காடியாக தரம் உயர்த்த வேண்டும்.

அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் சாலை பல நாட்களாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். வரம்பியம் சித்ரா வீடு முதல் விட்டுக்கட்டி நூலகம் வரை உள்ள.
ஆற்றங்கரை மண் சாலையை தார் சலையாக மாற்ற வேண்டும்.
வரம்பியும் நடுத்தெரு வடக்கு தெரு சாலையை தார் சாலையாக மாற்றக் கோரியும் வரம்பியம் கீழத்தெரு கிருஷ்ணா குளம் படித்துறையை சீரமைக்க வேண்டும்.
என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. சாலை மறியல் போராட்டம் ஜோதிபாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஐ வி என் நாகராஜ் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர் கலந்து கொண்டு கண்டன உரை எழுப்பி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது உடனடியாக. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய இதன் அடிப்படையில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி