திருத்துறைப்பூண்டி மன்னார்குடியை இணைக்கும் கப்பி சாலையை தார் சாலையாக உயர்த்த கிராம மக்கள் கோரிக்கை
மன்னார்குடியில் இருந்து
திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் தட்டான்கோவில் கிராமத்தில் இருந்து ஓரதூர் வரை சுமார் 13 கிலோ மீட்டர் வரையுள்ள கோரையற்றின் கீழ் கரையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை மருதூர், ரெகுநாதபுரம், வாலிஓடை, பைங்காட்டூர், ஒரதூர், கிராமங்கள் வழியாக முத்துபேட்டை, மன்னார்குடி செல்வதற்கும் திருத்துறைப்பூண்டி திருவாரூர் செல்ல வும்
பயன்படுகிறது. தென்பரை, ராதாநரசிம்மபுரம், வல்லூர், கெளுவதூர், பாலையூர் பகுதி மக்கள் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல இந்த சாலை பயன்பட்டது. இந்த சாலை தொடர்ந்து பராமரிக்கப்படாததால் பழுதடைந்து குண்டும் குழியுமாகவும் சாலையின் அடியில் உள்ள கப்பிகள் வெளியே தெரியும் அளவிற்கும் பழுதடைந்துள்ளதால் மருத்துவமனை செல்லவும் பள்ளி கல்லூரி மாணவர்கள் விரைவாக சென்று வரவும் சிரமம் உள்ளது. குறிப்பாக தீயணைப்பு வாகனம், அவரச ஊர்தி வாகனங்கள் தற்போது உள்ள சாலைகளில் வந்து செல்வதால் தாமதம் ஆகிறது, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. விவசாய வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது.