தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல உரிமைக்கான சங்கம் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையில் பணிபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாத ஊதியம் வழங்காத நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்தாமல் அவர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்க வேண்டும்.
ஒன்பதாண்டு காலமாக இதுவரையிலும் மாற்றுத்திறனாளிகளை கண்டுகொள்ளாத மோடி அரசுக்கு எதிராக தலைமை தபால் நிலையம் முற்றுகையிட்டு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் வடிவேல் மற்றும் ஒன்றிய துணைச் தலைவர் முருகானந்தம் வேம்பு வீராசாமி புஷ்பம் மதியழகன் செல்வகுமார் கண்ணன் வாசுகி முருகேசன் குப்புசாமி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஜெயராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.