சலவைத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செயல்படும் மன்னார்குடி வட்ட சலவையாளர்கள் நல சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சலவைத் தொழிலாளர்கள் 70 பேருக்கு தலா 500 ரூபாய் மதிப்பிலான அரிசி, எண்ணெய், முந்திரி, வெள்ளம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருள் மற்றும் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மன்னார்குடி வட்ட சலவையாளர்கள் நல சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.