ரயில் பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும் பயணிகள் கோரிக்கை

54பார்த்தது
ரயில் பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும் பயணிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி,
திருக்குவளை வழியாக புதிய அகல ரயில் பாதை அமைத்திட 2009 ஆம் ஆண்டு ரயில்வே போர்டு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு 120 கோடி ரூபாய் நிதி நிலை அறிக்கையில் திட்ட ஒதுக்கீடாக நிதி ஒதுக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 14 வருடங்கள் ஆன நிலையில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை மூலம் இணைக்கப்படுவதால்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மார்த்தாண்டம் , மற்றும் திருவனந்தபுரம் போன்ற கேரளா செல்லும் ரயில்கள் இந்த புதிய ரயில் பாதையான வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, வழியே செல்வதால் சுமார் 50 கிலோமீட்டர் பயண தூரமும் பயண நேரமும் மிச்சமாகும்.

மத்திய ரயில்வே துறை உடனடியாக செயல்பட்டு வேளாங்கண்ணி - திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகளை விரைவில் முடித்து விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி