உள்ளிக்கோட்டையில் வீட்டிற்கே சென்று பட்டா வழங்கிய அமைச்சர்

71பார்த்தது
உள்ளிக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டி. ஆர். பி. ராஜா வீடு வீடாக சென்று பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா வந்திருந்தார். உள்ளிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். உள்ளிக்கோட்டை கிராமத்தில் பயனாளிகளின் இல்லத்திற்கு அமைச்சர் டி. ஆர். பி. ராஜா நேரடியாக சென்று பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி