முதியோர்களுக்கு மதிய உணவு

84பார்த்தது
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காவலர்கள் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் அடிப்படை உபகரணங்கள் வழங்கிய காவல்துறையினர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் ஒன்றிணைந்து உதவும் கரங்கள் தொண்டு நிறுவனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து இன்று புத்தாண்டை முன்னிட்டு எடையூர் பாரதமாதா ஆதரவற்ற பெண்களுக்கான மறுவாழ்வு மையத்தில்.
முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான அனைத்து காவலர்களும் கேக் வெட்டியும் மனநலம் பாதிக்கப்பட்டவர் முதியோர்களுக்கு இனிப்புகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.
மேலும் அங்குள்ள 38 ஆதரவற்ற பெண்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நபருக்கு நைட்டி குளிர்காலங்களுக்கு பயன்படுத்தும் போர்வை நைட்டி உள்ளிட்ட அத்தியாவசியம் உபகரணங்களை வழங்கி சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் காவலர்கள் பாரத மாதா தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி