ஹெச் எஸ் ரவுடி கைது காவல்துறை விசாரணை

67பார்த்தது
ஹெச் எஸ் ரவுடி கைது காவல்துறை விசாரணை
எரவாஞ்சேரி பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த HS ரௌடி அதிரடி கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. S. ஜெயக்குமார், M. Sc, (Agri. , ) அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ரௌடிசம், அடிதடி மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எரவாஞ்சேரி கடைவீதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட- திருவழிமிழலை, மேலதண்டம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜோதி மகன் தென்னரசு (வயது-33) என்ற HS ரவுடி கைது செய்யப்பட்டார். இவர் மீது எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வரலாற்று தாள் (Rowdy History Sheet) பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவர் மீது எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 05-வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

சிறப்பாக செயல்பட்டு HS ரௌடியை கைது செய்த எரவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமமூர்த்தி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், M. Sc, (Agri). , அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

தொடர்புடைய செய்தி