பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை. அரசுக் கல்லூரி முதல்வர் மீது வழக்கு
நன்னிலம் பகுதியில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் அரசுக் கல்லூரி முதல்வர் மீது நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பெண் ஒருவர் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு, கல்லூரி முதல்வர் ராமசுப்பிரமணியம், தன்னை தனிமையில் வந்து பார்க்க வேண்டும், ஆசையாக பேச வேண்டும் போன்று பல்வேறு விதங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் கௌரவ விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் மீது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் கல்லூரி விரிவுரையாளர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.