திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் தற்பொழுது குருவை சாகுபடி பணி மேற்கொள்ளப்பட்டு முற்றிலும் கருகியதால் தமிழக விவசாயிகளுக்கு மே மாதம் தண்ணீர் திறந்த நிலையில் அதனை நம்பி மேலும் சம்பா சாகுபடி நேரடி விதைப்பு பணியில் விளக்குடி பகுதி விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக அப்பகுதி முழுவதும் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நேரடி விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஓரிரு நாட்கள் மட்டுமே தண்ணீர் முறையாக வழங்கப்பட்டது. மற்ற நாட்களில் தண்ணீர் வழங்காதால் நேரடி விதைப்பு பணி முற்றிலும் முளைக்கத் துவங்கி கருகையும் துவங்கிவிட்டது.
இதற்கு கடைமடை பகுதிகள் முழுமையாக தூர்வாரப்படாதே முக்கிய காரணமாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். முழுமையாக பாசன வாய்க்கால்கள் தூர்வாராகலாம் வடிகால்கள் தூர்வாராதலும் இந்த தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் காட்டி வருகின்றனர்.
தங்கள் வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களையும் அடமானம் வைத்து விதைக்கும் பணி செய்தும் எங்களுக்கு எந்தவிதமான பலன்களும் இல்லை அரசு போர்க்கால அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கி இழப்பீடு வழங்க வேண்டும் என விளக்குடி விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.