திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்துறைப்பூண்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சார வசதி பெறும் விளக்குடி ராயநல்லூர் மேட்டுப்பாளையம் இடையூறு சங்கேந்தி எக்கல் பெருக வாழ்ந்தான் மற்றும் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிகள் பாமணி கொற்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு.
நெடும்பலம் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பல்லாங்கோவில் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில்.
இந்த மின்சாரம் இன்று 10. 10. 2023 மின் பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார செயற்பொறியாளர் தகவல் வழங்கியதன் அடிப்படையில் தற்போது அது கைவிடப்பட்டு வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வேறொரு நாட்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 10. 10. 2023 அன்று வழக்கம் போல் மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும்.
என மின் செயற்பொறியாளர் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தகவல் வெளியிட்டுள்ளார்.