திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார். மாணவி அபிநிஷா போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் நேதாஜி செய்திருந்தார்.