பனை விதையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

1236பார்த்தது
பனை விதையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்திற்காக முதற்கட்டமாக 20 ஆயிரம் பனை விதைகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனலிடம் வழங்கினார். இந்த ஒரு கோடி விதைகள் ஆதிரெங்கம், கொருக்கை, கொக்காலடி , தொண்டிய காடு பகுதியில் விதைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி உள்ளார். விதைகளை நான் பெற்றுக்கொண்டபோது திருத்துறைப்பூண்டி தாசில்தார், வருவாய் ஆய்வார்கள், ஆதிரெங்கம் ஊ. ம. த வீரா, கொருக்கை ஊ. ம. த K. P. ஜானகிராம், கொக்காலடி ஊ. ம. த வசந்தன், கொருக்கை கிராம உதவியாளர் இராஜமுத்துவேல் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி