தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின் படி மன்னார்குடி வட்ட கிளையில் வட்டத்தின் ஒன்றிய தலைவர் M. ஆரோக்கியமேரி தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
சத்துணவு அமைப்பாளர், சமையலர் உதவியாளர்களுக்கு தொகுப்பு ஊதிய அடிப்படையில் வேலை உத்தரவு ஆணை வழங்கிய தமிழக அரசை கண்டித்தும் தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் m. செந்தில் நாதன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் இரா. செந்தில்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் j. பொன்முடி, மாவட்ட இணை செயலாளர் சுகுமாரன், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் நிரைவுறையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக P. அகிலா நன்றி கூறினார்.