பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் ஆலோசனைகூட்டம்

78பார்த்தது
திருத்துறைப்பூண்டியில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக பாட்டாளி தொழில் சங்க நாகை மண்டல கிளை நிர்வாகிகளின் ஆலேசனை கூட்டம் மண்டல தலைவர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக பாட்டாளி தொழிற்சங்க கொடியினை ஏற்றி கோஷங்கள் எழுப்பி ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில் மண்டல பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் சம்மேலன பொதுச்செயலாளர் வடிவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
01. 09. 2023 முதல் அமல்படுத்த வேண்டிய 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடன் துவங்க வேண்டும்.
காலதாமதம் ஆகும் மாதங்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகையாக மாதம் 3000 கணக்கிட்டு நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும்.
வழங்கப்படாமல்நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு டிசம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் பண பலன்களை வழங்காமல் உள்ளது. இதனால் மிகவும் அதிக இன்னல்களுக்கு ஆளாகி இறப்பு ஏற்படுகிறது எனவே உடன் பணப் பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சுப்ரமணிய அய்யர் மற்றும் கணேச கவுண்டர், சுரேஷ், கல்விபிரியன், சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மண்டல பொருளாளர் மதியழகன் நன்றியுரை கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி