முத்துப்பேட்டையில் வெற்றி வேட்பாளர் நன்றி தெரிவிப்பு

71பார்த்தது
இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றார். இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டையில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு வேட்பாளர் செல்வராஜ் வருகை புரிந்தார். அப்போது பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள லைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த அவர், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி