ஆக்ஸ்போர்டு காட்டேஜ் நர்சரி பள்ளியில் யோகாசனம்

81பார்த்தது
திருவாரூர் ஆக்ஸ்போர்டு காட்டேஜ் நர்சரி பள்ளியின் சார்பில் உலக சர்வதேச யோகாசனம்.

உலக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூர் நகருக்கு உட்பட்ட துர்காலயா ரோடு சாலையில் அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியின் விளையாட்டு அரங்கில் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது. நிகழ்விற்கு பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கேபி பில்டர்ஸ் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான கே. பி. பெருமாள் கலந்து கொண்டார். ஏராளமான மாணவச் செல்வங்களும் மற்றும் யோகா பயிற்சிணர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். யோகாசன நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் கே. பி. ரவி சிறப்பாக செய்திருந்தார். நிகழ்வின் போது பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் அரசன் பள்ளியின் பொறுப்பாளர்கள் வாராய் சதீஷ் ஸ்ரீகாந்த் உள்பட ஆசிரியை ஆசிரியைகள் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இறுதியாக பாஜக திருவாரூர் நகர தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி