ரயிலில் அடிபட்டு மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு

80பார்த்தது
மேற்கு வங்க மாநிலம் டிக்கா பகுதியைச் சேர்ந்த சுகுமார்தாஸ் இவர் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் பகுதியில் ரயில்வே மின்சார புதைவட ஒப்பந்த முறையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று விடியற்காலை பேரளம் அருகே இஞ்சிக்குடி ரயில்வே தண்டவாளத்தில் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடல் நசுங்க உயிரிழந்து கிடந்துள்ளார்.
உடன் அப்பகுதியாகச் சென்ற பொதுமக்கள் உயிரிழந்ததை பார்த்து திருவாரூர் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி தற்கொலையா? அல்லது விபத்தா? இல்லை வேறு ஏதேனும் என்பதா குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த சுகுமார் தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி