திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் அறங்காவலர் நியமனத்தில் அறநிலையத்துறை பொதுமக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் செய்யாததோடு, வலங்கைமான் ஒன்றிய திமுக செயலாளர் அன்பரசன் பரிந்துரைத்த நபரான செந்தில்குமார் என்பவரை அறங்காவலராக அறநிலையத்துறை நியமனம் செய்தது.
இதனை கண்டிக்கும் வகையில் கோவிந்தக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திருவாரூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அறங்காவலர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கோவில் சொத்தை அபகரிக்கும் நோக்கில் அறங்காவலர் தனிச்சையாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி கோரிக்கை அடங்கிய மனுவினை அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் அளித்தனர்.