தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான வலங்கைமானில் உள்ள பாடிகட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் லட்சக்கணக்கானோர் பாடை காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர் இரவு செட்டில் திருவிழா நடைபெற்றது கோவிலின் எதிர்புறம் அமைக்கப்பட்ட உயர்ந்த மரத்தில் ஆடு மற்றும் வேதியர் சிலை கட்டப்பட்டு 12 முறை சுற்றப்பட்டது இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.