பட்டதாரி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

85பார்த்தது
பட்டதாரி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்
குடவாசல் வட்டார வள மையத்தில், கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாணவா்களின் திறன் அடிப்படையில் கற்றல் கற்பித்தலில் மேம்பாடு அடையவும், மாணவ- மாணவிகள் அரசு சாா்பில் நடைபெறும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறவும், வட்டார அளவிலான பட்டதாரி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே, மாவட்ட அளவில் சிறப்பாக பயிற்சி பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு சுமாா் 40 பட்டதாரி ஆசிரியா்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

இதில், குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் க. குமரேசன், க ஜெயக்ஷ்மி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் த. பூபாலன் ஆகியோா் பங்கேற்று, பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தனா்.

தொடர்புடைய செய்தி