நன்னிலம் பகுதியில் மின்னல் இடியுடன் கூடிய மழை

78பார்த்தது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்னல் இடியுடன் மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் மின்னல், இடி மற்றும் காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகளும் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி