மகா மாரியம்மன் கோவிலில் சூரிய பூஜை வழிபாடு

78பார்த்தது
மகா மாரியம்மன் கோவிலில் சூரிய பூஜை வழிபாடு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மன்னார்குடி கும்பகோணம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் அருகே பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடை காவடி திருவிழாவும், ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தெப்பத் திருவிழாவும் பிரசித்தி பெற்ற விழாக்களாகும். இந்நிலையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை முதல் நான்கு நாட்கள் தொடர்ந்து சூரிய பூஜை நடைபெற உள்ளது.

நேற்றைய தினம் காலை ஆறு மணி முதல் மாலை வரை சூரிய பூஜை நடைபெற்ற பின் அம்மனுக்கு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதனை எடுத்து இரவு அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி