திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜெயஸ்ரீ மற்றும் தீபிகா ஆகியோர் ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் கால்பந்து போட்டியில், தமிழ்நாட்டு அணிக்காக விளையாடி தேசிய அளவில் இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராஜூ ஆகியோரை தலைமை ஆசிரியர் வெங்கடேசன் இன்று பாராட்டி சிறப்பித்தார்.