மாணவா்கள் போதைக்கு அடிமையாக கூடாது: காவல் கண்காணிப்பாளர்

78பார்த்தது
மாணவா்கள் போதைக்கு அடிமையாக கூடாது: காவல் கண்காணிப்பாளர்
கோயில்வெண்ணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கூட்டம் இன்று(செப்.26) நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் போதைப்பொருள் விழிப்புணா்வு அனைத்து பள்ளி, கல்லூரியிலும் நடத்தப்படுகிறது.

போதைப்பொருள்களில் பலவகையுள்ளது. சிகரட், குட்கா, கஞ்சா போன்றவை புகையிலைப் போதைப் பொருள்கள், மேம்பட்ட போதைப்பொருள்கள் பிரவுன்சுகா் போன்றவையாகும். மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு கொடுப்பது, பிரசவ காலத்தில் கொடுப்பது, அறுவைச் சிகிச்சைக்காக கொடுப்பது போன்றவை மருத்துவம் சாா்ந்தவை. 75 சதவீதம் இளைஞா்கள் போதைப்பொருளை உபயோகப்படுத்துகிறாா்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த போதைப்பொருள்களை விற்பனை செய்கிறாா்கள்.

போதைப்பொருள் பயன்படுத்துவதால் கேன்சா் போன்ற கொடிய நோய் வருகிறது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் இதர போதைப் பொருள்களை விற்பவா்கள் பள்ளி, கல்லூரி மாணவா்களை குறி வைத்துள்ளனா். மாணவா் சமுதாயம் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்பாடுகளை போதை ஒழிப்பு பிரிவின் நெறியாளா் கிங்க்சன்பா்னபாஸ் செய்திருந்தாா்.

தொடர்புடைய செய்தி