வடுவூரில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி

0பார்த்தது
துறை ஆசைத்தம்பி நினைவாக AMC கபடி கழகம் சார்பில் 31ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கபடி தொடர் போட்டி வடுவூர் மேல்பாதி கிராமத்தில் இரவு தொடங்கி நடைபெற்றது. JK அகடமி கேரளா, கர்நாடக ஸ்டேட் அணி, தமிழ்நாடு போலீஸ், கஸ்டம்ஸ் மதுரை, எஸ்.ஆர்.எம் யூனிவர்சிட்டி என 24 அணிகள் கபடி போட்டியில் பங்கேற்றன. 

முதல் சுற்றில் வடுவூர் கபடி அணியும், லயோலா கல்லூரி சென்னை அணியும் மோதின. இரண்டாவது சுற்றில் சாய் சென்னை அணியும் வி.கே திருச்சி அணியும் மோதின. இறுதி போட்டிகள் நாளை இரவு நடைபெற உள்ளது. வெற்றி பெறும் அணிக்கு சூழல் கோப்பையும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் கபடி போட்டிகளைக் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி