சௌந்தரவல்லி சமேத உத்தர கோகர்ணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

75பார்த்தது
திருவாரூர் அருகே அருள்மிகு சௌந்தரவல்லி சமேத உத்தர கோகர்ணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்


திருவாரூர் அருகே வண்டாம்பாலை கிராமத்தில் உள்ள அருள்மிகு செளந்தரவள்ளி சமேத உத்தரகோகர்ணேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை முதல் கால யாக பூஜையுடன் துவங்கி நடைப்பெற்று வந்தது. இன்று காலை நான்காம் கால யாகபூஜைகள் நடைப்பெற்று மகாபூர்ணாஹூதி, தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மல்லாரி இசை முழங்க யாக சாலையில் பூஜிக்கப்பட்ட கடங்களை சிவாச்சாரியார்கள் யாகசாலையில்இருந்து எடுத்து ஆலய வலம் வந்து , ராஜகோபுரம், உத்திரகோகர்ணேஸ்வர்ர், செளந்தரவல்லிஅம்மன், வினாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வர்ர், மாகலெட்சுமி, நவக்கிரங்கள் போன்ற சன்னதி விமானகலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து விமானகலசங்களுக்கு மாலை சாத்தி பூஜைகள் செய்து தீபாரதனை காட்டினர். பின்பு சுவாமி அம்பாள் போன்றவற்றிற்கு அபிஷேகம் செய்து தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து வழிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி