தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மிக பிரம்மாண்டமான முறையில் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதே போல் பேரூராட்சி பகுதியான நீடாமங்கலத்தில் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நீடாமங்கலம் கிளை தலைவர் சேது பாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நீடாமங்கலத்தில் நடத்துவது என்றும் இதில் மாநில நிர்வாகிகளை பங்கேற்க வைப்பது தப்பாட்டம் மயிலாட்டம் நாட்டுப்புற பாடல்கள் என நாட்டுப்புற கலைகளை அரங்கேற்றுவது குறித்தும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.