திருவாரூர், கப்பல் நகர், அடியக்கமங்கலம் ஆகிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை செவ்வாய்க்கிழமை 10. 10. 23 காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை திருவாரூர் நகரம், தஞ்சை சாலை, விளமல், கூடூர், கொரடாச்சேரி, மாங்குடி, அலிவலம், ஆந்தக்குடி, கொடிக்கால் பாளையம், ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.