வைகாசி விசாகத்தையொட்டி பூவனூர் சதுரங்கவல்லப நாதர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பூவனூரில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவிலில் வைகாசி விசாக விழா நடைபெற்றது காலையில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் மூஞ்சுரு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர், ரிஷப வாகனத்திலும், சிவன் பார்வதி, ரிஷப வாகனத்திலும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் பஞ்ச மூர்த்திகளும் கோவிலின் உள் பிரகாரத்திலும் வெளி பிரகாரத்திலும் நான்கு வீதிகளிலும் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது