கோட்டூர் ஒன்றியம் ஓவர்சேரி கிராமத்தில் மாதர் சங்கத்தின் புதிய கிராம அமைப்புக் கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய பொருளாளர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ. மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர், கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் என். மணிமேகலை அமைப்பின் செயல்பாடு குறித்து பேசினார். கட்சியின் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.