குடவாசலில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தொடக்க விழா!!

84பார்த்தது
குடவாசலில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தொடக்க விழா!!
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 62 மையங்களில் தொடங்கப்பட்டது 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 988 கற்போருக்கு மையமானது ஜூலை 2024 முதல் நவம்பர் 2024 வரை முதல் கட்டமாக நடைபெற உள்ளது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேங்காலிபுரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அகரஓகை ஆகிய மையங்களில் வட்டார கல்வி அலுவலர் திரு. க. குமரேசன்அவர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் திருமதி. க. ஜெயலட்சுமி ஆகியோர்கள் தொடங்கி வைத்தார்கள் இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு. த பூபாலன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கற்போர் மைய தன்னார்வலர் கலந்து கொண்டனர் விழாவில் கற்போருக்கான அடிப்படை எழுத்து அறிவு நூல்களை வழங்கி மையத்தை சிறப்பாக நடத்துவதற்கான அறிவுரைகளை வட்டார கல்வி அலுவலர்கள் வழங்கினார்கள் தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி