திருவாரூர், நீடாமங்கலம் தாலுக்கா கொரடாச்சேரி அடுத்த களத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்ணவாசல் மெயின் ரோட்டில் பல வருடமாக பழுதடைந்தும், ஆபத்தான நிலையிலும் இருக்கும் மின் கம்பம் உடனடியாக மாற்ற வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் மாற்றவில்லை. தினமும் பள்ளி, கல்லூரி வாகனம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக் கூடிய முக்கியமான சாலையில் அமைந்துள்ளது.