மன்னார்குடியில் ஆயிரம் இளைஞர்கள் ரத்ததானம் செய்யும் முகாமை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டதன் நினைவாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆயிரம் இளைஞர்கள் ரத்த தானம் வழங்கும் முகாம் நகராட்சி மாடல் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக இளைஞர் பருமன்றத்தினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் நடைபெற்ற முகாமை நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் பங்கேற்று தொடங்கி வைத்தார். முகாமில் AIYF, AISF இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் ரத்தத்தை தானமாக வழங்கினர். தானமாக பெறப்பட்ட இரத்தம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.