நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார்.