வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காப்பணாமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் மருத்துவர் அன்புமணி ஆகியோரின் வழிக்காட்டுதலின் பேரில் வருகின்ற மே மாதம் 11-ம் தேதி மகாபலிபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி இன்று வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக காப்பணாமங்கலம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பாமக திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில்
நடைபெற இருக்கும் மாநாட்டிற்காக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கடலூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தாமரைச்செல்வன் மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட செயலாளர் விமல் ஆகியோர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கிராம வாரியாக எத்தனை வேனில் அழைத்து வருவது, சுவர் விளம்பரங்கள் எழுதுவது போன்ற அறிவுரைகளை வழங்கினார்