காத்தாயி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

51பார்த்தது
காத்தாயி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
நன்னிலம் அடுத்த குடவாசல் அருகே உள்ள சித்தாடி கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயம்
இவ்வாலயம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இவ்ஆலயத்திற்கு மருளாளிகள் மற்றும் குலதெய்வ காரர்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாலயத்தில் இராஜகோபுரம் உட்பட ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு சென்ற நான்கு நாட்களாக யாக பூஜைகள் துவங்கி நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மிக விமர்சையாக நடைபெற்ற யாகசாலை பூஜையில் இன்று காலை
நான்காம் கால யாக பூஜையின் நிறைவு மகாபூர்ணாஹூதி நடைபெற்றது.
தொடர்ந்து மஹா தீபாராதனை யுடன் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அதன் பிறகு வானத்தில் கருட பகவான் வட்டமிட கோபுரம் மற்றும் இராஜகோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ காத்தாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி